கிராமங்களின் வளர்ச்சிக்கு சாதி முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது: – பிரதமர் மோடி

என் தமிழ்  என் தமிழ்
கிராமங்களின் வளர்ச்சிக்கு சாதி முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது: – பிரதமர் மோடி

கிராமங்களின் முன்னேற்றத்துக்கு சாதியே தடையாக இருக்கிறது’ என டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பிரதமர் மோடி பேசினார். டெல்லியில், நானா தேஸ்முக்கின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்,

“சாதியும் அதனால் ஏற்பட்ட பாகுபாடுகளும்தாம் நம் நாட்டு கிராமங்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளன. சாதி நம் கிராமங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது. ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சி மற்றும் கிராமப்புற மேம்பாடு மட்டுமே நமது கிராமங்களை மீட்டு, வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல முடியும். கிராம வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயம்செய்கிறது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “நமது கிராமங்களை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நகர்ப்புறங்களில் ஏற்படுத்தப்படும் அத்தனை முன்னேற்றத் திட்டங்களும் நமது கிராமங்களுக்கும் வழங்கப்படும்” எனக் கூறினார்.

மூலக்கதை