கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி

கவுஹாத்தி: கவுஹாத்தியில் நேற்று முன் தினம் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வென்ற பின், நள்ளிரவில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஓட்டலுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கினாலும், அதிர்ஷ்டவசமாக வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி, உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, அசாம் மாநில தலைமை செயலாளருக்கு அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.



சந்தேகிக்கப்படும் 2 பேர் ைகது செய்யப்பட்டிருப்பதாகவும் சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா
கூறுகையில், “நான் ஹெட் போன் அணிந்திருந்தேன்.

பஸ்சின் மறுபக்கத்ைத பார்த்து கொண்டிருந்தேன். திடீரென பலத்த சத்தம் கேட்டதால், மிகுந்த அச்சம் ஏற்பட்டது.

அது கல்லாக இருக்கலாம் என எங்கள் பாதுகாப்பு அதிகாரி கூறினார். இது ஒரு பயங்கரமான சம்பவம்.

இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது. யாருக்கும் காயம் இல்லை என்றாலும், இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது.

இந்திய ரசிகர்கள் மிக சிறப்பானவர்கள். அவர்கள் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கின்றனர்.

கிரிக்கெட் என்றால் உணர்ச்சி மிகுந்தவர்களாக காணப்படுகின்றனர்.

ஆனால் யாரோ ஒருவர் அதை கெடுத்து விடுகிறார்’’ என்றார்.

.

மூலக்கதை