2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்

கவுஹாத்தி : இந்தியாவுக்கு எதிராக கவுஹாத்தியில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. போட்டி முடிந்து, பரசபாரா ஸ்டேடியத்தில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள், ஓட்டலுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் வந்த பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இந்த படத்தை, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பின்ச் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். உடைந்த ஜன்னலுக்கு அருகே இருந்த இருக்கையில், கல் வீசி தாக்குல் நடத்தப்பட்ட நேரத்தில், யாரும் அமர்ந்திருக்கவில்லை.

இதனால் அதிர்ஷ்டவசமாக வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்தியா தோல்வியடைந்த விரக்தியில், ரசிகர்கள் யாரேனும் கல் வீசி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் விளையாடுவதால், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எப்போதுமே இந்திய ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அப்படி இருக்கையில் இந்த சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) ஆகியவை இதுவரை எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.


.

மூலக்கதை