இந்தியாவை குறிவைத்து சுரங்கத்தில் அணு ஆயுதம் பதுக்கி வைப்பு: பாகிஸ்தான் சதி அம்பலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவை குறிவைத்து சுரங்கத்தில் அணு ஆயுதம் பதுக்கி வைப்பு: பாகிஸ்தான் சதி அம்பலம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம்  அணு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள சுரங்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தல் ஐ. நா சபையில்  பேசிய பாகிஸ்தான் நாட்டு அரசின் ராணுவ அதிகாரி பாகிஸ்தானில் 30க்கும் மேற்பட்ட சிறிய வகையிலான ஏவுகணைகளை பத்திரமாக பதுக்கி வைத்துள்ளோம்.

அதனால் யாருக்கும் தொந்தரவு இல்லை என கூறினார். இதற்கு உலக அளவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

பாகிஸ்தான் பதுக்கியுள்ள அணு ஆயுதங்களை தீவிரவாதிகள் எடுத்துச் செல்ல வாய்ப்புகள் அதிகமுள்ளது என பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை மறைத்து வைக்க பயன்படுத்திய சுரங்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உலக அளவில் பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.



மேலும் இந்த சுரங்கத்தை  பாகிஸ்தான்  இந்தியாவின் தலைநகர் டெல்லியிலிருந்து 750 கிமீ தொலைவிலும் , பஞ்சாபிலிருந்து 350 கிமீ தொலைவிலும், அமிர்தசரசிலிருந்து 550 கிமீ தொலைவிலும் இந்தியாவை குறி வைத்து தாக்கும் அளவில் பூமிக்கடியில் அமைத்துள்ளது.    இந்த சுரங்கங்கள் 10 மீட்டர் உயரமும் 10 மீட்டர் அகலமும் கொண்டு 5 கிமீ வரையில் தோண்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் மேல் பகுதியில் இந்திய எல்லைகளை இணைக்கும் சாலைகள் இருக்கிறது.

இந்த சுரங்கத்திற்கு உள்ளே செல்லவும், வெளியேறவும் தனித் தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்திற்குள் 12 முதல் 14 அணு ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்  என உளவுத்துறை கூறியுள்ளது.

மேலும் இந்த சுரங்கத்தை சுற்றி பாதுகாப்பாக முள்வேலிகள் அமைக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை