ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் ஜுயன் மார்டின் டெல் பேட்ரோ 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் ஜுயன் மார்டின் டெல் பேட்ரோ 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டி ஒன்றில், அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல் பேட்ரோ-ஜார்ஜியாவின் நிக்கோலஸ் பஸிலஸ்விலி பலப்பரீட்சை நடத்தினர்.

இதில், 6-2, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜுயன் மார்டின் டெல் பேட்ரோ வெற்றி பெற்று, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். 2013ம் ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரில், ஜுயன் மார்டின் டெல் பேட்ரோ அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு முதல் சுற்று போட்டியில், 92ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் டியோபி-பிரான்சின் பெனாய்ட் பைரே பலப்பரீட்சை நடத்தினர். இதில், 6-4, 6-4 என்ற செட் கணக்கில், பிரான்சிஸ் டியோபி வெற்றி பெற்றார்.



10ம் நிலை வீரரான அமெரிக்காவின் சாம் குயரி அல்லது ஜப்பானின் யூச்சி சுகிதா ஆகியோரில் ஒருவருடன், இரண்டாம் சுற்றில், பிரான்சிஸ் டியோபி பலப்பரீட்சை நடத்தவுள்ளார். மற்றொரு முதல் சுற்று போட்டியில், தென் கொரியாவின் சூங் ஹையோன்-9ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் ராபர்ட்டோ படிஸ்டோ அகத் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில், சூங் ஹையோன் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.


.

மூலக்கதை