அமெரிக்க டெக்சாஸ் பல்கலைகழகத்தில் போலீசாரை சுட்டுக் கொன்ற மாணவர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க டெக்சாஸ் பல்கலைகழகத்தில் போலீசாரை சுட்டுக் கொன்ற மாணவர்

லுப் போக்: அமெரிக்காவில் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் போலீசார் ஒருவர் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் லுப்பாக் பகுதியில் டெக்சாஸ் டெக் பல்கலை கழகம் அமைந்துள்ளது.

இந்தப் பல்கலைகழகத்தில் போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  நேற்று இரவு மாணவர்கள் தங்கிய விடுதியில் பல்கலை கழக நிர்வாகம் சார்பில் திடீர் சோதனை நடைபெற்றது. ஹோலிஸ் டேனியல் என்கிற 19 வயது மாணவன் அறையில் போதைப் பொருட்கள் இருப்பதை பல்கலை கழக நிர்வாகிகள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து டேனியலை பலகலைகழக புறக்காவல் நிலையத்தில் ஒப்டைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்த தயாரான போது டேனியல் மறைத்து வைத்திருந்த  துப்பாக்கியை எடுத்து எதிரே நின்று இருந்த போலீசாரின் தலையில் சுட்டதும் போலீசார் சம்பவ இடத்திலே தலை சிதறி பலியானார்.

பல்கலை மாணவர்களுக்கு ஆயுதங்களை பல்கலை வளாகத்தில் கொண்டு வர தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் டேனியல் எப்படி ஆயுதம் கொண்டு வந்தார் என விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

தற்போது பல்கலை காவல் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்திருப்பது மேலும் பதற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.

.

மூலக்கதை