இந்திய அணியின் கேப்டன் யார் இந்த அமர்ஜித் சிங்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய அணியின் கேப்டன் யார் இந்த அமர்ஜித் சிங்?

பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டன் அமர்ஜித் சிங். பிபா உலக கோப்பை ஒன்றில், இந்திய அணியை வழி நடத்திய முதல் கேப்டன் என்பதால், அமர்ஜித் சிங்கின் பெயர் வரலாற்றில் இடம் பெற போகிறது.

வட கிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரை சேர்ந்தவர்தான் அமர்ஜித் சிங். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

இவரின் தந்தை சந்திரமணி சிங் விவசாயி. அவ்வப்போது கார்பெண்டர் வேலையும் செய்வார்.

தாய் அசங்க்பி தேவி மீன் விற்பனை செய்பவர். தினமும் ₹250-300 வரைதான் வருமானம் வரும்.

இந்த பணத்தை ெகாண்டுதான் குடும்பத்திற்கான செலவுகளை சமாளித்து வந்துள்ளனர். அமர்ஜித் சிங் மிட் பீல்டராவார்.

இந்திய யு-17 அணியின் பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி மடோஸ், 4 வீரர்களை தேர்வு செய்து, அவர்களை கேப்டன் பதவிக்கு போட்டியிட வைத்தார். அவர்களில் அமர்ஜித் சிங்கை தங்களின் கேப்டனாக, 27 பேர் கொண்ட இந்திய அணி ஒருமனதாக தேர்வு செய்தது.

‘’இந்த வயதில் நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அணியை வழிநடத்த அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

என்னை தவிர வேறு யாரையாவது, எனது அணி வீரர்கள் கேப்டனாக தேர்வு செய்திருந்தாலும் கூட நான் மகிழ்ச்சிதான் அடைந்திருப்பேன். இந்திய அணியில் நிறைய கேப்டன்கள் உள்ளனர்.

ஆனால் வழிநடத்த ஒருவர்தான் தேவை என்பதால் என்னை தேர்வு செய்துள்ளனர். முதல் போட்டிக்கு 60 ஆயிரம் ரசிகர்கள் வரவுள்ளனர்.

அதுதவிர நாடு முழுவதும் ரசிகர்கள் போட்டியை கண்டு ரசிப்பார்கள். எப்போதுமே நமக்கு ஆதரவு அளிப்பவர்கள் தேவை.

அது முக்கியமானதும் கூட. கடினமாக முயற்சி செய்து சிறப்பாக விளையாடுவோம்.

போட்டியின் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்’’ என நம்பிக்கையுடன் பேசுகிறார் அமர்ஜித் சிங்.


.

மூலக்கதை