ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி.20 தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றும் : கவாஸ்கர் கணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி.20 தொடரை 21 என இந்தியா கைப்பற்றும் : கவாஸ்கர் கணிப்பு

மும்பை : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4 -1 என இந்தியா கைப்பற்றியது.

அடுத்ததாக இரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி. 20 தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் வரும் 7ம் தேதி  நடக்கிறது.



இதனிடையே  டி. 20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய மாஜி வீரரான டீன் ஜோன்ஸ் 2-1 என ஆஸ்திரேலியா வெல்லும் என கணித்துள்ளார்.

ஐசிசி டி. 20 தரவரிசையில்  இந்திய  அணி 116 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், ஆஸ்திரேலியா 110 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை