இலங்கை அணிக்காக களமிறங்கும் சங்கா! மஹேலவுக்கும் அழைப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை அணிக்காக களமிறங்கும் சங்கா! மஹேலவுக்கும் அழைப்பு

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக அடைந்து வரும் தோல்விகளால் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனமும் விளையாட்டுத்துறை அமைச்சரும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
 
இந்நிலையில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அணியை மீளக்கட்டியெழுப்ப விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர விசேட செயலமர்வு ஒன்றை நடத்தி அதன் மூலம் எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் மேற்கொள்ள  வேண்டிய செயற்றிட்டம் ஒன்றை தயாரித்துள்ளார்.
 
இந்த புதிய திட்டத்தின் படி ஐந்து பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றையும் அமைச்சர் நியமித்துள்ளார்.
 
அதில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பெயரை பரிந்துரைத்துள்ளார். அத்தோடு அரவிந்த டி சில்வாவும் அதில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
இந்தக் குழுவில் குமார் சங்கக்கார இணைந்துகொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மஹேலவுக்கும் அமைச்சர் இதில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த குமார் சங்கக்கார அதிலிருந்தும் தற்போது ஓய்வுபெற்றுள்ள நிலையில் தொழில்முறை இருபதுக்கு 20 போட்டிகளில் மட்டும் விளையாடுவேன் என அறிவித்துள்ளார்.
 
கிரிக்கெட் குறித்த ஞானமும் அதன் செயல்முறை பற்றிய சிறந்த அனுபவமும் கொண்டுள்ள சங்கக்கார இலங்கைக் கிரிக்கெட் அணியைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டத்தில் இணைந்து கொண்டால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அது மிகப்பெரிய பலமாக அமையும்.

மூலக்கதை