கொரியா தீபகற்பத்தில் மீண்டும் நெருக்கடி நிலை: – வட கொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு

என் தமிழ்  என் தமிழ்
கொரியா தீபகற்பத்தில் மீண்டும் நெருக்கடி நிலை: – வட கொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு

வடகொரிய எல்லையில் பெருமளவு ரஷ்ய ராணுவத்தினர் திடீரென்று குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அமைந்துள்ள Khasan பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெருமளவு ரஷ்ய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி சீனா, வடகொரியா மற்றும் ரஷ்ய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் Zaozyonara மலைப் பகுதியிலும் ரஷ்ய ராணுவம் கடும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே எழுந்துள்ள போர் சூழல் காரணமாக தென் கொரியாவில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவமே, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வடகொரியா அமெரிக்கா இடையே எழுந்துள்ள போர் சூழலை பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் ஒருபோதும் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளாது என மாஸ்கோ முன்னர் தெரிவித்திருந்தது.ஆனால் போருக்குரிய ஆயத்தங்களுடன் ரஷ்யா வடகொரிய எல்லையில் ராணுவத்தை குவித்து வருவது பல முறை உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. மட்டுமின்றி வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ரஷ்யா ஒருபோதும் பார்த்துக்கொண்டு வெறுமனே இருந்துவிடாது எனவும் ரஷ்யாவின் முக்கிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.மேலும் அணுஆயுத நாடுகளில் ஒன்றாக வடகொரியாவை உலக நாடுகள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் சமீப கலத்தில் கோரிக்கையும் முன்வைத்தார்.மட்டுமின்றி ரஷ்யாவின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் கொரிய தீபகற்பத்தில் தம்மை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற எச்சரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு உணர்த்துவதாகவே உள்ளது என ராணுவ உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.

மூலக்கதை