ஜெனீவாவில் வைகோ உரை: எங்கள் இதயக் குமுறலை கேட்டு நீதி வழங்குங்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெனீவாவில் வைகோ உரை: எங்கள் இதயக் குமுறலை கேட்டு நீதி வழங்குங்கள்

சென்னை: ஜெனீவா ஐநா மன்றத்தில் தான் ஆற்றிய உரை குறித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழர்களின் சார்பில், மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளை மிகுந்த பணிவோடு பிரார்த்தனை செய்து கேட்கிறேன். இலங்கையில் தமிழர் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, எங்கள் கண்ணீரைத் துடையுங்கள்.

அதன் மூலம், ஈழத்தமிழர்களுக்குப் புதிய விடியல் உதயமாகட்டும். 1995ம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து ஐந்து லட்சம் தமிழர்கள், ராணுவத் தாக்குதலால் வெளியேற்றப்பட்டு, திக்குத் தெரியாமல் திண்டாடி, காடுகளுக்குள் செல்ல நேர்ந்தது.

அப்போது போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் அன்றைய ஐ. நா. பொதுச்செயலாளர் புத்ரோஸ் காலி கொடுந்துயரத்திற்கு ஆளாகி விட்ட ஈழத்தமிழர்களின் கண்ணீரைத் துடைத்து, ஆதரவு தர வேண்டுகோள் விடுத்தனர்.



மனித உரிமைகள் மொத்தமாக நசுக்கப்பட்டு, யுத்த காலத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்டுப் பெருங்கூட்டமாக அகதிகள் ஆவதும், காணாமல் போவது குறித்தும் ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது. அனைத்துலக மாநாடு எவற்றிற்கெல்லாம் கண்டனம் தெரிவித்ததோ, அவை அனைத்தும்  இலங்கைத் தீவில், சிங்கள ராணுவத்தால் நடத்தப்பட்டது.

தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். தமிழ்ப்பெண்கள் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

நாங்கள் கேட்பதெல்லாம், ஈழத்தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றிவிட்டு, ஐ. நா. மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான். இலங்கையில் தமிழர் தாயகம் நாஜிகள் நடத்திய சித்திரவதைக் கூடம் போல ஆகி விட்டது.

எங்கள் இதயக் குமுறலை, வேதனைப் புலம்பலை, பொங்கி வரும் கண்ணீரை மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் பாருங்கள்.

எங்களுக்கு நீதி வழங்குங்கள்.

.

மூலக்கதை