நைட்டி அணிந்து டிவி பார்த்த ஜெயலலிதா: – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

என் தமிழ்  என் தமிழ்
நைட்டி அணிந்து டிவி பார்த்த ஜெயலலிதா: – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

டிடிவி தினகரன் சென்னை அடையாரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அமைச்சர்களாக இப்போது உள்ளவர்கள் ஜெயலலிதா இறந்தவுடன் தங்கள் பதவியை தக்க வைக்க பொய் பேசினார்கள். இப்ேபாதும் பதவியை தக்க வைத்துக் கொள்ள ஜெயலலிதாவின் மரணம் குறித்து பேசுகிறார்கள். இவர்கள் யாரும் விசாரணை வேண்டும் என்று கேட்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே திமுக தான் ஜெயலலிதா மரணத்தில் விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. மரணத்துக்கு காரணம் சசிகலா தான் என்று ஒரு தவறான வாதத்தை வைத்தார்கள். இது போன்ற பொய் பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் சசிகலா கேட்டுக் கொண்டதால் தான் நான் ஆர்கே நகர் தேர்தலில் நின்றேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது உடல்நலம் தேறி வந்தார். அப்போது அவர் நைட்ி அணிந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்த சம்பவத்தை சசிகலாவே வீடியோ எடுத்தார். ஜெயலலிதா நைட்டி உடையில் இருந்ததால் பொதுமக்கள் முன்னிலையில் வீடியோவை கொண்டு வருவது நன்றாக இருக்காது. அதனால் நீதி விசாரணையின்போது காட்டுவோம். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வைக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி கூட வேண்டாம்.

தற்போது பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியோ அல்லது வேறு அதிகாரிகளை வைத்தோ விசாரணை நடத்த வேண்டும். அப்போது நாங்கள் அந்த வீடியோவை அங்கு கொடுப்போம். தேர்தல் ஆணையத்தில் வரும் 28 ம் தேதி எடப்பாடி அணியினர் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கு பதிலாக நாங்களும் 29 ம் தேதி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளோம். ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ய கோரி திமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அதே போல் நாங்களும் ஒரு வழக்கை தொடர இருக்கிறோம். ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ மட்டுமல்ல இன்டர்போல் விசாரித்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை. தினகரனுடன் திவாகரன் திடீர்

ஆலோசனை:

அடையாரில் உள்ள தினகரன் இல்லத்திற்கு நேற்று காலை 9.30 மணியளவில் திடீர் வருகை புரிந்த திவாகரன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தினகரனுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். பின்னர் 11 மணியளவில் ஆலோசனையை முடித்துவிட்டு திவாகரன் கிளம்பினார். ஏற்கனவே தினகரனுக்கும், திவாகரனுக்கும் கருத்து மோதல்கள் இருந்த நிலையில் இருவரும் எடப்பாடிக்கு எதிராக ஒரே நிலைப்பாட்டுடன் தான் செயல்பட்டு வருகின்றனர். சில எம்எல்ஏக்கள் எனக்கும் ஆதரவாக இருக்கின்றனர் என்று தொடர்ந்து திவாகரன் கூறி வந்தார். இந்நிலையில், குடகில் உள்ள சில எம்எல்ஏக்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் எனவும் தினகரன், திவாகரன் ஒரணியாக இணைந்து செயல்படுவது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

மூலக்கதை