கா்நாடகாவில் 150 இடங்களில் பாஜ வெற்றி பெறும் : பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கா்நாடகாவில் 150 இடங்களில் பாஜ வெற்றி பெறும் : பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை

பெங்களூரு : கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜ 150 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

அக்கட்சியை சேர்ந்த சித்தராமய்யா முதல்வராக இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஒரு சில மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று.

இந்த சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும். மத்தியில் பாஜ ஆட்சி அமைத்தபின்னர் நடைபெற்ற பல்வேறு சட்டமன்ற தேர்தல்களில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்திலும் காங்கிரஸ் தோல்வியை தழுவி வந்துள்ளது.

கடந்த முறை பாஜவிலிருந்து எடியூரப்பா விலகி தனியாக போட்டியிட்ட காரணத்தால் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. தற்போது எடியூரப்பா பாஜவில் மீண்டும் இணைந்துள்ளார்.

காங்கிரசிடம் இழந்த ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய உத்வேகத்துடன் பாஜ காய்களை நகர்த்தி வருகிறது. முன்னாள் காங்கிரஸ் முதல்வர் எஸ்எம்.

கிருஷ்ணா தற்போது பாஜவில் இணைந்துள்ளார்.

கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் யுத்திகள் குறித்து பாஜ நிர்வாகிகளுடன் அவர் நேற்று காலாபுராகியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, கர்நாடகாவில் 150 இடங்களுக்கும் கூடுதலாக பாஜ வெற்றி ெபறும் என்றார். அவர் மேலும் கூறியதாவது: கர்நாடகாவில் தற்போது காங்கிரசுக்கு எதிராகவும், பாஜவுக்கு ஆதரவாகவும் அலை வீசுகிறது.

இதற்கு முன்பு மொத்தமுள்ள 224 இடங்களில் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போது 150க்கும் கூடுதலான இடங்களில் பாஜ வெற்றி உறுதி.

அனைத்து தரப்பு மக்களையும் சித்தராமய்யா ஏமாற்றி உள்ளார். தற்போது ஜாதி மத அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சித்து வருகிறார்.

அவரது பிரிவினை அரசியலை மக்கள் வெறுக்க தொடங்கியுள்ளனர். ேமாடியின் ஊழலற்ற வளர்ச்சி மாடலை கர்நாடக மக்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு ஜவடேகர் கூறினார்.


.

மூலக்கதை