அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு நாய் குரைப்பது போன்றது: – நியூயார்க்கில் வடகொரியா அமைச்சர் கேலி

என் தமிழ்  என் தமிழ்
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு நாய் குரைப்பது போன்றது: – நியூயார்க்கில் வடகொரியா அமைச்சர் கேலி

ஐ.நா. பொதுசபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது நாய் குரைப்பதற்கு சமம் என்று கூறியிருக்கிறது வடகொரியா. ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் வந்த வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரீ யோங் ஹோ இந்த தரம் தாழ்ந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார். வடகொரியாவை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்ற டிம்பின் அச்சுறுத்தல் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சரின் பதில் இவ்வாறு இருந்தது.

வெள்ளி அன்று ஐ.நா.வில் உரையற்ற உள்ள அவர் டிரம்ப் மீது மேலும் மோசமான விமர்சனங்களை முன்வைப்பார் என தெரிகிறது. ஐ.நா.வின் தடைகளை மீறி வடகொரியா அணுகுண்டு சோதனைகளை நடத்துகிறது. இந்த மாதம் மிகவும் பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை சோதித்ததுடன். நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையையும் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள டிரம்ப் வடகொரியாவை அழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனிடையே வடகொரியா விவகாரம் நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக சீனா கவலை தெரிவித்துள்ளது.

மூலக்கதை