சர்க்கரை நோய் மருத்துவ முறைகேட்டை சொல்லும் ஒளடதம்

தினமலர்  தினமலர்
சர்க்கரை நோய் மருத்துவ முறைகேட்டை சொல்லும் ஒளடதம்

ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் சார்பில் நேதாஜி பிரபு தயாரித்து நடித்துள்ள படம் ஒளடதம். மாடல் அழகி சமீரா ஹீரோயின். தஷி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் சர்க்கரை நோய் தொடர்பான மருத்துவ முறைகேடுகளை பற்றிய படமாக உருவாகி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் நேதாஜி பிரபு கூறியதாவது:

மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல் அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக் சந்தைப்படுத்துதல் என்று விரியும் மெடிக்கல் திரில்லர் வகைப்படமான ஒளடதம் உருவாகி உள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபல நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்கிறது.

மருத்துவ உலகின் 30 சதவிகித பணம் சர்க்கரை நோயை சுற்றி புரள்கிறது. சர்க்கரை நோயை உண்டாக்கும் உணவுப் பொருளையும் இறக்குமதி செய்து. அதை குணப்படுத்தும் மருந்துகளையும் இறக்குமதி செய்து இந்திய மக்களை சந்தை பொருளாக்கி வருகிறார்கள். இந்த உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காக தீவிரமான ஆராய்ச்சி செய்து ஒளடதம் திரைக்கதை அமைத்துள்ளோம். என்கிறார் நேதாஜி பிரபு.

மூலக்கதை