தூய்மையே தெய்வீகமானது : தூய்மை இந்தியாவிற்கு ரஜினி ஆதரவு

தினமலர்  தினமலர்
தூய்மையே தெய்வீகமானது : தூய்மை இந்தியாவிற்கு ரஜினி ஆதரவு

தூய்மையே தெய்வீகமானது : தூய்மை இந்தியாவிற்கு ரஜினி ஆதரவு
சென்னை : பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருக்கிறார். பிரதமரின் கனவு திட்டங்களில் ஒன்று தூய்மை இந்தியா. இதை நாடு முழுக்க தீவிரப்படுத்த அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்களின் ஆதரவை திரட்டி வருகிறார் மோடி. பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினியும் தூய்மை இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினி, தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது.... "மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். தூய்மையே தெய்வீகமானது" என்று கூறியிருக்கிறார்.

மூலக்கதை