பிளாப் படம் கொடுத்தவருக்கு மீண்டும் வாய்ப்பளித்த மம்முட்டி

தினமலர்  தினமலர்
பிளாப் படம் கொடுத்தவருக்கு மீண்டும் வாய்ப்பளித்த மம்முட்டி

மம்முட்டி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் தான் 'டபுள்ஸ்'. இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான சோஹன் சீனுலால் என்பவர் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் கதாநாயகியாக டாப்சி நடித்திருந்தார் என்றாலும் நதியா-சுரேஷ் ஜோடி பல வருடங்கள் கழித்து இணைந்து நடித்திருந்தது தான் பெரிதாக பேசப்பட்டது. ஆனாலும் படம் அந்த எதிர்பார்ப்பை தக்க வைக்க தவறி பிளாப் லிஸ்ட்டில் இடம் பிடித்தது.

அதன்பின் அந்த இயக்குனர் சோஹன் சீனுலால் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் நடிகராக மாறி சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். அதிலும் மம்முட்டி நடித்த, தி கிரேட் பாதர், தோப்பில் ஜோப்பன், புத்தன் பணம் என மம்முட்டி படங்களில் தொடர்ந்து நடித்தும் வந்தார். அந்தவகையில் மீண்டும் சோஹன் சீனுலாலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரும் விதமாக தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தந்துள்ளாராம் மம்முட்டி. இம்முறை கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன் என தயாராகி வருகிறாராம் சோஹன் சீனுலால்.

மூலக்கதை