மம்முட்டியை தாடி வளர்க்க சொன்ன இயக்குனர் ராம்

தினமலர்  தினமலர்
மம்முட்டியை தாடி வளர்க்க சொன்ன இயக்குனர் ராம்

இயக்குனர் ராம் டைரக்சனில் மம்முட்டி நடித்துள்ள படம் பேரன்பு.'. நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு மம்முட்டி, தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள இந்தப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் மம்முட்டி நாற்பது வயதுக்காரர் ஆக நடித்திருக்கிறார். இந்த கேரக்டருக்காக படத்தில் தாடி வைத்து நடித்துள்ளாராம். அதற்கான காரணத்தை இயக்குனர் ராமே கூறியுள்ளார்.

“66 வயதானாலும் கூட மம்முட்டி இன்னும் இளமையான லுக்குடன் தான் இருக்கிறார். தாடி வைக்காமல் பார்த்தால் கொஞ்சம் ரிச்சாக தெரிவார். ஆனால் இந்தப்படத்தில் அவர் வெளிநாட்டில் இருக்கும் டாக்சி ட்ரைவராக பணிபுரிபவர் என்பதால் அவரது கேரக்டருக்கு தாடி வைத்தால் தான் நன்றாக இருக்கும் என அவரிடம் கூறினேன். மம்முட்டியும் அதற்கு ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்” என கூறியுள்ளார் ராம்.

மூலக்கதை