பெண் இயக்குநர் படத்தில் வரலட்சுமி

தினமலர்  தினமலர்
பெண் இயக்குநர் படத்தில் வரலட்சுமி

இயக்குநர் மிஷ்கினிடம் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்து வந்தவர் பிரியதர்ஷினி. இவர் தற்போது இயக்குநராகி இருக்கிறார். பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லர் கலந்த டிராவல் ஸ்டோரியான இந்தப் படத்தில் வரலட்சுமிக்கு மாறுபட்ட கேரடக்டராம்.

சென்னையில் துவங்கி பூனே வரையில் பயணிக்கும் கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு தற்போது கதாநாயகன் தேர்வு நடைபெற்று வருகிறது. 'விக்ரம் வேதா' படத்துக்கு இசையமைத்த சாம்.சி. இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். மிஷ்கின் இயக்கிய 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இம்மாதம் 30ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அக்டோபர் 15-ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

மூலக்கதை