முதல்முறையாக விக்ரமுடன் நடிக்கும் சூரி

தினமலர்  தினமலர்
முதல்முறையாக விக்ரமுடன் நடிக்கும் சூரி

சுமார் எட்டு வருடங்களுக்கும் மேலாக முன்னணி காமெடியனாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் சூரி. ஆனால் இதுவரை விக்ரம் உடன் இணைந்து நடித்ததில்லை. முதல்முறையாக விக்ரமுடன் இணைந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சாமி 2' படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதேபோல், 2010-ல் வெளிவந்த 'ராவணன்' படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்த பிரபு, தற்போது சாமி-2 படத்தில் மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் .

'ஸ்கெட்ச்' படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது 'துருவ நட்சத்திரம்' படத்திற்காக ஜார்ஜியா சென்றுள்ளார் விக்ரம். இந்த ஷெட்யூல் முடிவடைந்ததும் விரைவில் திருநெல்வேலியில் துவங்கவுள்ள 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் விக்ரம்.

சாமி-2 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், டெக்ஷீனியன்கள் யார் என்ற விவரம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தற்போது அறிவித்துள்ளார். விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா. சூரி, பிரபு ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு - ப்ரியன், இசை - தேவிஸ்ரீ பிரசாத். ஸ்டன்ட் கனல் கண்ணன் போன்ற விவரங்களை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

மூலக்கதை