பௌத்தத்துக்கான முன்னுரிமையை விட்டுக் கொடுக்க முடியாது! – தினேஸ் குணவர்த்தன

என் தமிழ்  என் தமிழ்
பௌத்தத்துக்கான முன்னுரிமையை விட்டுக் கொடுக்க முடியாது! – தினேஸ் குணவர்த்தன

பௌத்தத்துக்கான முன்னுரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என, ஒன்றிணைந்த எதிரணி தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். வழிபடுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இடம் பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், அறிக்கையில் சகல கட்சிகளினதும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரதமர் முன்வைத்த விடயங்களுக்கிடையில் முரணான ஏற்கமுடியாத விடயங்களும் இருக்கின்றன.

இந்த அறிக்கையில் சகல மக்களினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.மக்கள் என்பது அரச சார்பற்ற நிறுவனங்களல்ல. இங்கு நாம் 14 அம்சங்களை முன்வைத்திருந்தோம். ஒற்றையாட்சி என்பது தொடர வேண்டும்.ஆனால் இதனை ஆங்கிலத்தில் ஒருவாரும் தமிழில் வேறு விதமாகவும் அர்த்தம் கற்பித்திருப்பது கநாடகமாகும்.ஒற்றையாட்சியில் மக்களின் ஜனநாயக உரிமைகள் பலப்படுத்த வேண்டும். உப குழுக்களில் எமது எம்.பிகளின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சர்வாதிகாரமாக யாப்பு உருவாக்க முடியாது.பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதை நீக்க இடமளிக்க மாட்டோம் என்றார்.

மூலக்கதை