மெர்சல் டீசர் படைத்த சாதனை

PARIS TAMIL  PARIS TAMIL
மெர்சல் டீசர் படைத்த சாதனை

 அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே அதிகமானோரால் பார்கப்பட்டது. தற்போது வரை `மெர்சல்' டீசரை 8,589,250 பேர் பார்த்து ரசித்துள்ளனர். 

 
`மெர்சல்' டீசரை இதுவரை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் உலகளவில் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை `மெர்சல்' டீசர் முறியடித்துள்ளது. இந்த லைக் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவேகம் படத்தின் டீசரை இதுவரை 5  லட்சத்து 99 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 
 
 
 
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் விஜய் ஜோடியாக நடித்துள்ளனர். 
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு `மெர்சல்' ரிலீசாக இருக்கிறது. 
 

மூலக்கதை