4 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

தினமலர்  தினமலர்
4 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரு தினங்களாகவே கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் இன்று(செப்., 22) கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(செப்., 22, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ.65.12-ஆக இருந்தது. இதன்மூலம் மீண்டும் ரூபாயின் மதிப்பு 65-ஐ தொட்டுள்ளது.

பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்திருப்பது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 54 காசுகள் சரிந்து ரூ.64.81-ஆக இருந்தது.

மூலக்கதை