தங்கம் விலை : காலைநிலவரம் சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை : காலைநிலவரம் சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 22-ம் தேதி) சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,844-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.22,752-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,420-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.42.80-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.40,040-க்கும் விற்பனையாகிறது.

மூலக்கதை