இந்தியாவில் சிறப்பான வளர்ச்சி: உலக வங்கி பாராட்டு

தினமலர்  தினமலர்
இந்தியாவில் சிறப்பான வளர்ச்சி: உலக வங்கி பாராட்டு

நியூயார்க் : இந்தியா முழு வீச்சில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது என உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

அதிக நிதி


நியூயார்க்கில், புளும்பெர்க் சர்வதேச வர்த்தக மாநாட்டில், உலக வங்கி தலைவர், ஜிம் கிம் பேசியதாவது: இந்தாண்டு, சர்வதேச பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்திய பொருளாதாரம், வலிமையுடன் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. வளரும் நாடுகளுக்கு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, அதிக நிதி தேவைப்படுகிறது. கல்வி, ஆரோக்கியம், பருவநிலை மாறுபாடு சார்ந்த முன்னேற்பாடுகள் போன்றவற்றுக்கு, அதிக முதலீடு தேவை. இந்த வாய்ப்பை, அரசு மற்றும் தனியார் துறையினர் இணைந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாராட்டு


கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்த இருந்தது. நடப்பாண்டில் இந்த வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். இந்தியா உடன், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவையும் வளர்ச்சி கண்டு வருகின்றன. விளை பொருள் ஏற்றுமதியாளர்களை விட, இறக்குமதியாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அதனால், வளர்ச்சி சீராக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடன் குறித்து, உன்னிப்பாக, உலக வங்கி கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை