அனந்தபுரி எக்ஸ்பிரஸில் சந்தன மர கட்டைகள் கடத்தல்

விகடன்  விகடன்
அனந்தபுரி எக்ஸ்பிரஸில் சந்தன மர கட்டைகள் கடத்தல்

சென்னை - அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சந்தன மரகட்டைகள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் அனந்தபுரி ரயில் பாறசாலை  ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்த போது ரெயில்வே போலீஸார் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் படி  இருந்த 52 வயதான முத்துக்குட்டி மற்றும் 60  வயதான ஆறுமுகம் ஆகிய இரண்டு பேரையும் பிடித்து ரெயில்வே போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்து, அவர்களிடம் இருந்த அட்டை பெட்டைகளை போலீஸார் சோதனை செய்த போது அதில் 100 கிலோ எடை உள்ள சந்தன மர கட்டைகள் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து முத்துக்குட்டி மற்றும் ஆறுமுகத்தை ரெயில்வே போலீஸார் கைது செய்து 100 கிலோ சந்தன மர கட்டைகளையும் பறிமுதல் செய்யனர். இவர்கள் யாரிடம் இருந்து சந்தன மர கட்டைகளை வாங்கினார்கள்? கேரளாவில் யாருக்கு விற்க கொண்டு சென்றார்கள் என்றும் இவர்களின் பின்னணியில் உள்ள சந்தன மர கடத்தல் கும்பலை பற்றியும் ரெயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூலக்கதை