மெக்ஸிகோ நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் கூகுள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மெக்ஸிகோ நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் கூகுள்!!

மெக்ஸிகோ நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நாடே ஸ்தம்பித்தது. தலைநகரில் 25 -க்கும் அதிகமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. 
 
இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 
 
இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மெக்ஸிகோ நாட்டுக்கு, பல்வேறு நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளது. 
 
இந்நிலையில், உலகின் முன்னணி இணைய நிறுவனமான கூகுள், நிலநடுக்கத்தால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண உதவித் தொகையாக அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து டிவீட் செய்துள்ள கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை “நிலநடுக்கம் தந்த பேரழிவுக்குப் பின்னர் எங்கள் மனம் மெக்ஸிகோ நாட்டு மக்களோடுதான் உள்ளது. நிவாரணப் பணிகளுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குகிறோம்” என்றார்.
 

மூலக்கதை