தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி 20 சதவீதம் வீழ்ச்சி

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி 20 சதவீதம் வீழ்ச்சி

இந்த மாதத்­து­டன் நிறை­வ­டை­யும், சர்க்­கரை உற்­பத்தி ஆண்­டில், கடும் வறட்சி கார­ண­மாக, கடந்த ஆண்டை விட, உற்­பத்தி, 20 சத­வீ­தம் வரை வீழ்ச்சி அடை­யும் என, தெரி­கிறது.

தமி­ழ­கத்­தில் நில­விய வறட்சி கார­ண­மாக, கரும்பு பயி­ரி­டும் பரப்­ப­ளவு, 2016 அக்., – 2017 செப்., வரை­யி­லான, சர்க்­கரை ஆண்­டில், வெகு­வாக குறைந்­துள்­ளது. இத­னால், இந்த ஆண்டு, சர்க்­கரை உற்­பத்தி வீழ்ச்சி அடை­யும் என தெரி­கிறது.

இது குறித்து, தமி­ழக தொழில் துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: தமி­ழ­கத்­தில், கரும்பு சாகு­படி பரப்பு தொடர்ந்து குறைந்து வரு­கிறது. 10 ஆண்­டுகளுக்கு முன், ஒன்­பது லட்­சம் ஏக்­க­ராக இருந்த சாகு­படி, தற்­போது, ஐந்து லட்­சம் ஏக்­க­ராக குறைந்து விட்­டது. பல மாவட்­டங்­களில், வட­கி­ழக்கு பரு­வ­மழை பொய்த்­த­தா­லும் கரும்பு சாகு­படி பரப்பு குறைந்து விட்­டது. சர்க்­கரை ஆண்டை பொறுத்­தவரை, அது, அக்., 1 –செப்., 30 வரை கணக்­கி­டப்­ப­டு­கிறது. 30ம் தேதி­யு­டன், இந்த சர்க்­கரை ஆண்டு முடி­கிறது. இந்த ஓராண்­டில், 155.86 லட்­சம் டன் கரும்பு, சர்க்­கரை ஆலை­க­ளுக்கு சென்­றுள்­ளது.

அத­னால், 11.36 லட்­சம் டன், சர்க்­கரை தான் கிடைக்­கும். கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில், இந்த ஆண்டு சர்க்­கரை உற்­பத்தி, 2.2 டன் வீழ்ச்சி அடை­யும்.பல இடங்­களில் வறட்சி கார­ண­மாக, இம்­முறை, கரும்பு சாகு­ப­டிக்­கான முயற்சி கைவி­டப்­பட்­டது. அத­னால், வரும் ஆண்­டில், சர்க்­கரை உற்­பத்தி கடு­மை­யாக வீழ்ச்சி அடை­யும். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.
– நமது நிருபர் –

மூலக்கதை