‘திறமையான தலைமையின் கீழ் டாடா குழுமம்’: ரத்தன் டாடா பெருமிதம்

தினமலர்  தினமலர்
‘திறமையான தலைமையின் கீழ் டாடா குழுமம்’: ரத்தன் டாடா பெருமிதம்

புதுடில்லி : ‘‘டாடா குழு­மம், திற­மை­யான தலை­மை­யின் கீழ் தான் ஒப்­ப­டைக்­கப்­பட்டு உள்­ளது,’’ என, டாடா குழு­மத்­தின் கவு­ரவ தலை­வர், ரத்­தன் டாடா பெரு­மி­தம் தெரி­வித்து உள்­ளார்.

அவர், ‘சி.என்.பி.சி – டிவி 18’ டிவிக்கு அளித்த பேட்டி: டாடா குழு­மம், திற­மை­சா­லி­யான, டாடா சன்ஸ் தலை­வர், என்.சந்­தி­ர­சே­க­ரன் தலை­மை­யில், சிறப்­பாக செயல்­ப­டு­கிறது. பாரம்­ப­ரிய நன்­னெறி நடை­மு­றை­களை பின்­பற்­று­வ­தில், சிறி­த­ள­வும் சம­ர­சம் செய்து கொள்­ளா­மல், டாடா நிறு­வ­னங்­கள் பணி­யாற்றி வரு­கின்றன. டாடா குழு­மத்­தைச் சேர்ந்த சில நிறு­வ­னங்­கள், மறைந்து போயி­ருக்­க­லாம்; புதிய நிறு­வ­னங்­கள் உரு­வாகி இருக்­க­லாம். ஆனால், டாடா குழும நிறு­வ­னங்­கள் என்­றுமே, நன்­னெ­றி­யில் இருந்து வழு­வி­ய­தில்லை.

குழு­மத்­தின் தோற்­றம் மாறி இருக்­க­லாம். அடுத்த, 30 ஆண்­டு­களில், மாறு­பட்ட மற்­றொரு வடி­வெ­டுக்­க­லாம். ஆனால், எப்­போ­தும் வர்த்­த­கத்­தில் கடைப்­பி­டித்து வரும் நன்­னெ­றி­களின் தரம் மட்­டும் மாறவே மாறாது. டாடா குழு­மம், உப்பு முதல் சாப்ட்­வேர் வரை, பல்­வேறு தொழில்­களில் ஈடு­ப­டு­கிறது. டாடா நிறு­வ­னங்­களின் வரு­வா­யில், பெரு­ம­ளவு, சாதா­ரண மனி­தர்­களின் முன்­னேற்­றம் மற்­றும் சமூக நல­னுக்­கான நற்­கா­ரி­யங்­க­ளுக்­குத் தான் செல்­கி­றதே தவிர, நிறு­வ­னர்­கள் அல்­லது குழும தலை­வர்­களின் பாக்­கெட்­டுக்கு செல்­வ­தில்லை.

இந்த கொள்­கையை, டாடா குழு­மம், தொடர்ந்து உறு­தி­யாக கடைப்­பி­டித்து வரு­கிறது. டாடா குழு­மம், 2018ல், 150வது ஆண்டு விழாவை கொண்­டாட உள்­ளது, மிகுந்த மகிழ்ச்­சியை அளிக்­கிறது. சில நிறு­வ­னங்­கள் பிரிந்­தா­லும், இவ்­வ­ளவு காலம், குழும நிறு­வ­னங்­கள் ஒன்­று­பட்டு செயல்­ப­டு­வதை பார்க்­கும் போது மனம் பூரிக்­கிறது. இந்த ஒற்­று­மையை தொடர்ந்து காத்து வரு­வ­தற்கு, எந்த விலை­யும் கொடுக்க, நாங்­கள் தயா­ராக உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

டாடா குழும நிறு­வ­னங்­களின் பெரும்­பான்மை பங்­கு­கள், டாடா சன்ஸ் நிறு­வ­னம் வசம் உள்ளன. இந்­நி­று­வ­னத்­தின் தலை­வர் பத­வி­யில் இருந்த, சைரஸ் மிஸ்­திரி, 2016 அக்., 24ல், அதி­ர­டி­யாக நீக்­கப்­பட்­டார். இதை தொடர்ந்து, நிறு­வ­னத்­தின் இயக்­கு­னர் பத­வி­யில் இருந்­தும், இந்­தாண்டு பிப்., 6ல் வெளி­யேற்­றப்­பட்­டார்.சைரஸ் மிஸ்­தி­ரி­யின் நீக்­கத்தை தொடர்ந்து, டாடா சன்ஸ் தலை­வ­ராக, என்.சந்­தி­ர­சே­க­ரன் நிய­மிக்­கப்­பட்­டார்.

சைரஸ் மிஸ்திரி மனு ஏற்பு:
டாடா சன்ஸ், அடக்­கு­மு­றையை கையாள்­வ­தா­க­வும், நிர்­வா­கம் திறம்­பட செயல்­ப­ட­வில்லை என்­றும் கூறி, சைரஸ் மிஸ்­தி­ரி­யின் இரு நிறு­வ­னங்­கள், தேசிய நிறு­வ­னங்­கள் சட்ட மேல்­மு­றை­யீட்டு தீர்ப்­பா­யத்­தில் முறை­யிட்டு உள்ளன. நிறு­வ­னங்­கள் சட்ட விதிப்­படி, டாடா சன்­சில், குறைந்­த­பட்­சம், 10ல் ஒரு பங்கு வைத்­துள்­ளோர் மட்­டுமே, வழக்கு தொடர முடி­யும். எனவே, இந்த விதி­மு­றை­யில் இருந்து விலக்­க­ளிக்க, டாடா சன்­சில், குறைந்த பங்கு மூல­த­னத்தை கொண்­டுள்ள, சைரஸ் மிஸ்­திரி நிறு­வ­னங்­கள் கோரி இருந்­தன. இதை தீர்ப்­பா­யம் ஏற்று, டாடா சன்ஸ் நிறு­வ­னத்­திற்கு, ‘நோட்­டீஸ்’ அனுப்ப உத்­த­ர­விட்டு உள்­ளது.

மூலக்கதை