இணைப்பு கட்டண குறைப்பால் எங்களுக்கு லாபமில்லை: ‘ஆர்ஜியோ’

தினமலர்  தினமலர்
இணைப்பு கட்டண குறைப்பால் எங்களுக்கு லாபமில்லை: ‘ஆர்ஜியோ’

புதுடில்லி : தொலை தொடர்பு சேவை­யில், நிறு­வ­னங்­க­ளுக்கு இடை­யே­யான இணைப்பு கட்­ட­ணம், நிமி­டத்­திற்கு, 14 காசு­களில் இருந்து, 6 காசு­க­ளாக குறைக்­கப்­பட்டு உள்­ளது.

அக்., 1 முதல், இந்த நடை­முறை அம­லுக்கு வர உள்­ளது. 2018 ஜன., 1 முதல், அடி­யோடு கட்­ட­ணம் நீக்­கப்­பட உள்­ளது. இந்த கட்­டண குறைப்­புக்கு, கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ள, ஏர்­டெல், வோட­போன் நிறு­வ­னங்­கள், ‘ஆர்­ஜியோ’வுக்கு சாத­க­மாக, இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ள­தாக குற்­றஞ்­சாட்டி உள்ளன.

இதை மறுத்து, ‘ஆர்­ஜியோ’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இணைப்பு கட்­டண குறைப்­பால், எங்­க­ளுக்கு எந்த லாப­மும் இல்லை. ஏற்­க­னவே, நாங்­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இல­வச அழைப்­பு­களை வழங்கி வரு­கி­றோம். எட்டு ஆண்­டு­க­ளாக, ஒவ்­வொரு முறை­யும், ‘டிராய்’ இணைப்பு கட்­ட­ணத்தை குறைக்­கும் போது, இந்­நி­று­வ­னங்­கள் எதிர்த்து வந்­துள்ளன.

அதே சம­யம், அதன் பயனை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கா­மல் உள்ளன. கிரா­மப்­பு­றங்­களில், தொலை தொடர்பு சேவை விரி­வு­ப­டுத்­து­வது பாதிக்­கும் என, இந்­நி­று­வ­னங்­கள் கூறு­கின்றன; அவை, இணைப்பு கட்­ட­ணத்தை மானி­ய­மாக கரு­து­கின்றன. அந்­நி­று­வ­னங்­கள் நிதி வச­தி­யோடு இருக்க, மக்­கள், மொபைல் போன் கட்­ட­ணத்தை கூடு­த­லாக செலுத்த வேண்­டி­யுள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை