இளம் பெண் வக்கீல்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டும்

தினகரன்  தினகரன்

சென்னை: உயர் நீதிமன்ற பெண் வக்கீல்கள் சங்கத் தலைவி வி.நளினி, துணைத் தலைவர் ஷோபா, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி மற்றும் பொருளாளர், நூலகர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வக்கீல்கள் சேமநல நிதியை 7 லட்சமாக உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் அவர்கள், இளம் பெண் வக்கீல்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை, வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பெண் வக்கீல்களுக்கு விடுதி வசதி, மாற்றுத் திறனாளி பெண் வக்கீல்களுக்கு மூன்று சக்கர வாகன வசதி, பெண் வக்கீல்களுக்கு மகப்பேறு உதவித்தொகை, பெண் வக்கீல்கள் சங்க அலுவலகத்தை விரிவு படுத்த கட்டிட நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். இந்த மனுவை தான் பரிசீலித்து ஆவன செய்வதாக பெண் வக்கீல்களிடம் முதல்வர் உறுதியளித்ததாக நளினி தெரிவித்தார்.

மூலக்கதை