திமுக உறுப்பினர் சேர்ப்பு: அன்பழகன் அறிவிப்பு

தினகரன்  தினகரன்

சென்னை:  திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஊராட்சிகளில் உள்ள வார்டுகளில் வார்டு வாரியாக உறுப்பினர் பதிவு செய்யும்பொழுது அந்தந்த வார்டுகளில் உள்ள குக்கிராமங்கள் வாரியாக உறுப்பினர்களை பதிவு செய்து வார்டு எண் குறிப்பிட்டு, அதன் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட குக்கிராமங்களின் பெயரை அடைப்புக் குறிப்பில் குறிப்பிட வேண்டும். உறுப்பினராக பதிவு செய்வோர் அந்தந்த வார்டுகளில் குடியிருப்போராக இருத்தல் வேண்டும். ஒன்றியங்களில் அடங்கியுள்ள ஊராட்சிக் கழகங்களின் பெயர்களும் அதில் அடங்கியுள்ள வார்டுகளின் எண்ணிக்கையும் முரசொலியில் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் வார்டு வாரியாக உறுப்பினர் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை