கன்னியாகுமரி மாவட்ட விசைப் படகு மீனவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

விகடன்  விகடன்
கன்னியாகுமரி மாவட்ட விசைப் படகு மீனவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட விசைப் படகு மீனவர்கள் மற்றும் திருநெல்வேலி  மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் இடையே கடலில் மீன்பிடி தொழில் மேற்கொள்ளும் போது எழும் பிரச்னை தொடர்பாக ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து சேரன்மகா தேவி உதவி கலெக்டர்  தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த அறிக்கையை  குமரிமாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில். "சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தங்கு தளமாக  கொண்டு தொழில் புரியும் விசைப்படகுகள் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 -ல் தெரிவிக்கப்பட்டுள்ளது போல், தினமும் அதிகாலை  5 மணிக்கு கடலுக்கு   மீன்பிடிக்கச்  சென்று விட்டு, இரவு 9 மணிக்குள் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்ப வரவேண்டும்.

மீனவர்கள், எக்காரணம்  கொண்டும் கடலில்  தங்கி மீன் பிடிப்பில் ஈடுபடக்கூடாது. உத்தரவுக்கு மாறாக தங்கு மீன் பிடி தொழில் புரியும்  விசைப்படகு மீனவர்கள் மீது தமிழ்நாடு  கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும்  சட்டம் 1983-ன் படி அபராதம், தொழில் முடக்கம், மற்றும் படகு பதிவு ரத்து போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என செய்திக் குறிப்பில் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

மூலக்கதை