யார்னெக்ஸ் நூலிழை கண்காட்சி துவங்கியது... வளர்ச்சியை நோக்கி! மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு அச்சாரம்

தினமலர்  தினமலர்
யார்னெக்ஸ் நூலிழை கண்காட்சி துவங்கியது... வளர்ச்சியை நோக்கி! மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு அச்சாரம்

திருப்பூர் : ஆயத்த ஆடை வளர்ச்சிக்கு உறுதுணையாக பல புதிய வகை நூலிழைகளுடன், "யார்னெக்ஸ் ' கண்காட்சி, ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது.
பெங்களூருவை சேர்ந்த எஸ்.எஸ். டெக்ஸ்டைல் மீடியா நிறுவனம், நாடுமுழுவதும் யார்னெக்ஸ் கண்காட்சி நடத்தி வருகிறது. ஆடை தயாரிப்பு நகரான திருப்பூரில், 11வது யார்னெக்ஸ் மற்றும் டெக்ஸ் இந்தியா ஒருங்கிணைந்த கண்காட்சி, திருமுருகன்பூண்டியில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது.இதனை, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் திறந்து வைத்தார். "நிட்மா' சங்க தலைவர் ரத்தினசாமி, ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், ஆடை வர்த்தக முகவர்கள் சங்க தலைவர் இளங்கோ, எஸ்.எஸ். டெக்ஸ்டைல் மீடியா நிறுவன இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உட்பட தொழில் துறையினர் பங்கேற்றனர்.இதுவரை இல்லாதவகையில், மொத்தம், 139 அரங்குகளில், கண்காட்சி நடக்கிறது. நமது நாட்டின் பல்வேறு நகரங்களை சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பிலான புது வகை செயற்கை நூலிழைகள், துணி ரகங்கள், ஆடைகள், ஆடை தயாரிப்புக்கான லேபிள், லேஸ் போன்ற அக்சசரீஸ்களை இடம்பெற செய்துள்ளன.பயனற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை தூய்மை செய்து, பொடியாக்கி தயாரிக்கப்பட்ட புதுமையான செயற்கை நூலிழை, குளிர் கால ஆடை தயாரிப்புக்கு உ

மூலக்கதை