டிரம்ப் எண்ணம் நாய் கனவு: வட கொரியா பதிலடி

தினமலர்  தினமலர்
டிரம்ப் எண்ணம் நாய் கனவு: வட கொரியா பதிலடி

நியூயார்க்: வட கொரியாவை பயமுறுத்தலாம் என டிரம்ப் எண்ணினால் அது வெறும் நாய் கனவுதான் என வட கொரியா கூறியுள்ளது.
பொருளாதார தடையை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்து வருகிறது. இதற்கு ஐ.நா., கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா., கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவிற்கோ, நட்பு நாடுகளுக்கோ தொடர்ந்து தொல்லை கொடுப்பதன் மூலமும், வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்தால், அந்நாட்டை மொத்தமாக அழிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக வட கொரிய வெளியறவு அமைச்சர் ரி யாங் ஹோ கூறியதாவது: இப்படி எல்லாம் நாய் குரைப்பது போன்று பேசுவதன் மூலம் எங்களை பயமுறுத்தலாம் என்று டிரம்ப் எண்ணினால் அது வெறும் நாய் கனவுதான் எனக்கூறினார்.

மூலக்கதை