நிஜ பிணத்தை வைத்து சீரியல் படம் எடுத்த இயக்குனர்

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
நிஜ பிணத்தை வைத்து சீரியல் படம் எடுத்த இயக்குனர்

பிரிட்டனில் புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடர் 'ரிலிக் (Relik). கொலை மற்றும் துப்பறியும் கதையம்சம் கொண்ட இந்த தொடரில் ஒரு பிணத்தை வைத்து படமாக்க  வேண்டிய காட்சி ஒன்று வந்தது.    இந்த நிலையில் போலீஸ் அனுமதி பெற்று மார்ச்சுவரியில் உள்ள பிணத்தை ஸ்டுடியோவுக்கு கொண்டு வந்து படமாக்கப்பட்டது.

பின்னர் படப்பிடிப்பு முடிந்த பின்னர் மீண்டும் போலீஸிடம் தகவல் தெரிவித்துவிட்டு மார்ச்சுவரிக்கு பிணத்தை படக்குழுவினர்களே கொண்டு சென்று ஒப்படைத்துள்ளனர்.   உலக தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் உண்மையான பிணத்தை கொண்டு படமாக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் பாட்டர்சன் ஜோசப் என்ற புகழ்பெற்ற நடிகர் மனநல மருத்துவராக நடித்து வருகிறார்.

இந்த தொடர் பிரிட்டனில் சக்கை போடு போடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை