சினிமா கலை இயக்குனர் நடிகர் ஜி.கே. மரணம்

PARIS TAMIL  PARIS TAMIL
சினிமா கலை இயக்குனர் நடிகர் ஜி.கே. மரணம்

 சினிமா கலை இயக்குனர், டி.வி. நடிகர் ஜி.கே. என்கிற கோபிகிருஷ்ணா வயது 60.

 
இவர் சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் இதய கோளாறு காரணமாக கடந்த 14-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கோபிகிருஷ்ணாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரது உடல் நிலை மோசமானது. சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் மரணம் அடைந்தார்.
 
கோபிகிருஷ்ணா உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைஉலகினர், சின்னத்திரையினர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
 
அவரது மறைவுக்கு சினிமா, டி.வி. நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதிசடங்கு இன்று மாலை 5 மணியளவில் போரூரில் உள்ள மயானத்தில் நடக்கிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.
 
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜீத் உள்பட பல்வேறு நடிகர்கள் நடித்த 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கோபி கிருஷ்ணா கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். திரை உலகின் பிரபல கலை இயக்குனர் என்று பெயர் பெற்றவர்.
 
‘பாபா’, ‘போக்கிரி’ உள்பட சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருக்கிறார். டி.வி.யில் ‘கலசம்‘, ‘கங்கா’, ‘தங்கம்‘ உள்பட ஏராளமான தொடர்களில் நடித்து வந்தார்.
 
மறைந்த கோபிகிருஷ் ணாவுக்கு நாகேஷ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு கிருஷ்ணா என்ற மகனும், ஹேம சந்திரா என்ற மகளும் உள்ளனர்.
 

மூலக்கதை