ரூபாயின் மதிப்பு சரிவு கடும் வீழ்ச்சி

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பு சரிவு கடும் வீழ்ச்சி

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(செப்., 21) கடும் வீழ்ச்சியுடன ஆரம்பமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.64.53-ஆக வர்த்தகமானது. உலகளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்ததாலும், வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்திருப்பதாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.64.27-ஆக இருந்தது.

மூலக்கதை