ஐகியா நிறுவனம் சென்னையில் 2 கிளைகளை துவங்க முடிவு

தினமலர்  தினமலர்
ஐகியா நிறுவனம் சென்னையில் 2 கிளைகளை துவங்க முடிவு

சென்னை: ஐகியா பர்னிச்சர் நிறுவனம் சென்னையில் 2 கிளைகளை துவங்க திட்டமிட்டுள்ளது. இது 2019–2020 ம் ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வருகிறது.
சுவிடன் நாட்டை சேர்ந்த உலகின் புகழ்பெற்ற பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனமான ஐகியா (IKEA) நிறுவனம் சென்னையில் இரண்டு கிளைகளை துவக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவிக்கையில் :‘‘ சென்னையில் இரண்டு இடங்களில் எங்களது கிளைகளை துவங்க திட்டமிட்டுள்ளோம். இது குறித்து தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கிளைகளை துவங்குவதற்காக இடங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அருகே சுமார் 8–12 ஏக்கர் வரையிலான இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக எங்கள் நிறுவனம் ரூ 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருக்கிறது. மேலும் 4,000 பேர் இதன் மூலம் வேலை பெறுவர்.
ஐதராபாத், மும்பை, பெங்களூருவிக்கு பின் சென்னையை தேர்வு செய்துள்ளோம். எல்லாம் திட்டமிட்டப்படி நடக்கும் பட்சத்தில் 12 மாத கட்டுமானப்பணி மற்றும் 6 மாத அனுமதி பெறுவதற்கான வேலைகளுக்கு பின் 2019–2020 ல் கிளைகள் திறக்கப்படும்.
எங்கள் மற்ற ஐகியா கிளைகளை விட இந்த கிளைகளை மாறுபட்டதாக அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதில் ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையிலான ரெஸ்டாரெண்ட் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்காக இடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
திருப்பூரில் இருந்து இருந்து 5 நிறுவனத்தினர் எங்களுக்கு பர்னிச்சர் தயாரிப்பிற்கான துணிகளை சப்ளை செய்து வருகின்னறர். எங்கள் கிளை இங்கு அமைவதன் மூலம் சப்ளை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். மேலும் அவர்கள் உலகளவில் உள்ள ஐகியா நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் வாய்ப்பும் பெறுவர். எங்கள் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் 30 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி பொருட்களாவே அமையும், மேலும் உள்நாட்டு ஊழியர்களுக்கு மட்டுமே வேலைகள் வழங்கப்படும்.
இந்தியாவில் ஐகியாவின் முதல் கிளை ஐதராபாத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அது 2018 ம் ஆண்டு துவக்கத்தில் செயல்பாட்டிற்கு வரும். மும்பை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்டு வரும் கிளைகள் 2019ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும். நாங்கள் ஆண்டிற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் மூதலீடு செய்யவுள்ளோம். நாங்கள் நீண்ட கால திட்டத்துடன் களமிறங்கியுள்ளோம். எங்கள் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதற்கும் நீண்ட நாட்கள் ஆகும்.‘‘ என கூறினார்.

மூலக்கதை