மைத்திரிக்காக இராப்போசன விருந்து ஏற்பாடு செய்த ட்ரம்ப்!

PARIS TAMIL  PARIS TAMIL
மைத்திரிக்காக இராப்போசன விருந்து ஏற்பாடு செய்த ட்ரம்ப்!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் நேற்று நியூயோர்க்கில் முதல்முறையாகச் சந்தித்தனர்.
 
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று வரவேற்பு அளித்தார்.
 
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் இராப்போசன விருந்தொன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
 
இராப்போசனத்தின் பின்னர் இரு தலைவர்களும் நட்புறவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன், அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டமைக்கு ஜனாதிபதி மைத்திரி தனது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, அண்மையில் இயற்கை அனர்த்தங்களின் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஜனாதிபதி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
 
“சிறிலங்கா ஒரு அழகான நாடு எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் சிறிலங்காவின் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்”, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் சிறிலங்காவின் எதிர்கால நடவடிக்கைக்காக முடிந்தளவு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி உறுதியளித்தார்.
 
இதன்போது,  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதற் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோருடன் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முதற்பெண்மணி ஜெயந்தி சிறிசேனவும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.

மூலக்கதை