உணவு பாதுகாப்பு உரிமம் பெறாவிட்டால்... நடவடிக்கை பாயும்! மெஸ், ஓட்டல்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
உணவு பாதுகாப்பு உரிமம் பெறாவிட்டால்... நடவடிக்கை பாயும்! மெஸ், ஓட்டல்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருப்பூர் : ஓட்டல், மெஸ், உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதில் பின்தங்கியுள்ளன. உரிமம் பெறாத நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயுமென, மாவட்ட நிர் வாகம் எச்சரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 18 ஆயிரத்து, 588 அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் உள்ளன. இதில், 1,866 பேர் உரிமம் பெற்றுள்ளனர்; 6,163 ஓட்டல்கள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இதுவரை உரிமம் பெறாதவர்கள், உடனடியாக உணவுப்பாதுகாப்பு துறையில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.உணவு பொருள் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை யாளர்கள், ஓட்டல், டீ கடைகள், பால் வியாபாரிகள், சாலையோர வியாபாரி கள் அனைவரும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெற்று கொள்ள வேண்டும்.உணவு பாதுகாப்பு சட்டப்படி, உணவு நிறுவனங்கள் பதிவு செய்வதும், உரிமம் பெறுவதில் பின்தங்கியுள்ளன. பொது சுகாதார நலன்கருதி, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து கலெக்டர் பழனிசாமி அறிவுறுத்தியதாவது:ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் செய்யும், ஸ்டார் ஓட்டல், 5 ஆயிரம் ரூபாய், உணவு தயாரிப்பாளர், 3 ஆயிரம் ரூபாய், விற்பனையாளர், 2 ஆயிரம் ரூபாய் செலுத்தி உரிமம் பெற வேண்டும். ஆண்டுக்கு, 12 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்வோர், ஆண்டுக்கு, 100 ரூபாயை கருவூலத்தில் செலுத்தி, இணையதளத்தில் பதிவு செய்து, உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.பதிவு செய்தவர்கள், 15 நாட்களுக்குள் உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெற, உரிமையாளரின் அடையாள அட்டை நகல், பங்குதாரர் ஒப்பந்த நகல், வாடகை ஒப்பந்த நகல், மின் கட்டண ரசீது, உணவு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை விவரங்களுடன், இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், காலாவதியாகும் தேதிக்கு, 30 நாட்கள் முன்னதாக, கருவூல செலுத்து சீட்டின் (சலான்) மூலம் பணம் செலுத்தி, உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்க அனுபவம் இல்லாதவர், உணவு பாது காப்பு அலுவலகத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் மற்றும் பதிவு சான்று பெறாத உணவு வணிகர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும்.மேலும் விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தை, 0421 2971190 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். உணவு பொருள் தொடர்பான புகார்களுக்கு, 94440 42322 என்ற "வாடஸ் ஆப்' எண்ணை தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.அபராதம் செலுத்தணும்உணவு பாதுகாப்பு துறையில், உரிமம் பெற்றுள்ள ஓட்டல், மெஸ்கள், ஒவ்வொரு ஆண்டும், உரிய கட்டணத்தை செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். உரிமம் பெற்றவர்களுக்கு, உரிமம் காலாவதியாகும், 30 நாட்களுக்கு முன்,"இ-மெயில்' மூலமாக, முன்னறிவிப்பு செய்யப்படும்.உரிய காலத்தில் உரிமம் புதுப்பிக்காதவர்களுக்கு, தினமும், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தாவிட்டால், உணவு பொருள் பதிவில் பெற்றுள்ள முந்தைய பதிவு எண்ணை இழக்க நேரிடும் என, உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

மூலக்கதை