இணைப்பு கட்டணம் குறைப்பு: ஏர்டெல், வோடபோன் புலம்பல்

தினமலர்  தினமலர்
இணைப்பு கட்டணம் குறைப்பு: ஏர்டெல், வோடபோன் புலம்பல்

புதுடில்லி : தொலை தொடர்பு சேவை­யில், இணைப்பு கட்­ட­ணத்தை, ‘டிராய்’ குறைத்­துள்­ள­தற்கு, ஏர்­டெல், வோட­போன் நிறு­வ­னங்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ளன.

ஒரு நிறு­வன வாடிக்­கை­யா­ளர், வேறு ஒரு நிறு­வ­னத்­தின் தொலை தொடர்பு சேவையை பயன்­ப­டுத்­து­வ­தற்கு, இணைப்பு கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. இந்த கட்­ட­ணம் தற்­போது, ஒரு நிமி­டத்­திற்கு, 14 காசு­க­ளாக உள்­ளது; இதை, அக்., 1 முதல், 6 காசு­க­ளாக, ‘டிராய்’ குறைத்­துள்­ளது. 2018 ஜன., 1 முதல், இந்த கட்­ட­ணம் அடி­யோடு ரத்து செய்­யப்­பட உள்­ளது. இத­னால், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அழைப்பு கட்­டண செலவு குறை­யும். ஆனால், இந்த கட்­டண குறைப்­புக்கு, ஏர்­டெல், வோட­போன், ஐடியா ஆகிய நிறு­வ­னங்­கள் எதிர்ப்பு தெரி­வித்து உள்ளன.

‘ஏற்­க­னவே, நிதி நெருக்­க­டி­யில் உள்ள நிலை­யில், கட்­டண குறைப்பு கூடு­தல் சுமையை ஏற்­ப­டுத்­தும்; கிரா­மப்­பு­றங்­களில், தொலை தொடர்பு சேவையை விரி­வு­ப­டுத்த முடி­யாது’ என, அவை கூறி­யுள்ளன. ‘ரிலை­யன்­சின் ஜியோ மட்­டுமே, இந்த கட்­டண குறைப்­பால் பயன் அடை­யும்’ என­வும், பார­பட்­ச­மான, பிற்­போக்­குத் தன­மான முடிவை, ‘டிராய்’ எடுத்­துள்­ள­தா­க­வும், அவை குற்­றஞ்­சாட்டி உள்ளன. இது தொடர்­பாக, நீதி­மன்­றத்தை நாட­வும் அவை முடிவு செய்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

மூலக்கதை