உடனடியாக ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ வழங்க கோரிக்கை

தினமலர்  தினமலர்
உடனடியாக ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ வழங்க கோரிக்கை

புதுடில்லி : ‘ஜி.எஸ்.டி., நடை­மு­றை­யின் கீழ், செலுத்­திய வரியை விரை­வில் திரும்­பத் தர நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்’ என, ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள், மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­துள்ளன.

ஜி.எஸ்.டி.,யில் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் சந்­திக்­கும் பிரச்­னை­கள் குறித்து ஆராய, மத்­திய வரு­வாய் துறை செய­லர், ஹஸ்­முக் அதியா தலை­மை­யில், குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது. டில்­லி­யில் நடை­பெற்ற இக்­கு­ழு­வின் கூட்­டத்­தில், ஏற்­று­மதி மேம்­பாட்டு கூட்­ட­மைப்­பு­களின் தலை­வர்­கள் பங்­கேற்று, பிரச்­னை­களை எடுத்­து­ரைத்­த­னர்.

இதை­ய­டுத்து, அவர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது: அஜய் சஹாய், டைரக்­டர் ஜென­ரல், எப்.ஐ.இ.ஓ.: ஜி.எஸ்.டி.ஆர்., – 1 மற்­றும் 3பி படி­வங்­களில், தாக்­கல் செய்­யப்­பட்ட கணக்­கு­களின் கீழ் செலுத்­திய வரியை, உட­ன­டி­யாக திரும்ப வழங்க வேண்­டும் என, வலி­யு­றுத்தி உள்­ளோம். அவ்­வாறு வழங்­கா­த­பட்­சத்­தில், அக்­டோ­ப­ரில், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, 65 ஆயி­ரம் கோடி ரூபாய் முடங்­கும் அபா­யம் உள்­ளது. இத­னால், நடை­முறை மூலதன பற்­றாக்­குறை பாதிப்பு ஏற்­படும்.

பி.கே.ஷா, நிர்­வாக உறுப்­பி­னர், இ.இ.பி.சி.: பண்­டிகை காலம் நெருங்­கு­வ­தால், ஏற்­று­மதி செய்த உடன், செலுத்­திய வரி­யில், 90 சத­வீ­தத்தை உட­ன­டி­யாக திரும்ப அளித்து, பின், முழு­மை­யான சீராய்வு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­லாம்; வரி கழி­வு­களை சரி செய்து கொள்­ள­லாம்.

பி.அக­மது, துணைத் தலை­வர், சி.எல்.இ.: ஜி.எஸ்.டி.,யால், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் பல பிரச்­னை­களை சந்­திக்க நேர்ந்­துள்­ளது. அத­னால், உட­ன­டி­யாக, செலுத்­திய வரியை திரும்ப தர வேண்­டும்.

நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறை: ஏற்­று­ம­திக்­கான ஆப­ர­ணங்­களை தயா­ரிக்க தேவைப்­படும் மூலப்­பொ­ருட்­கள் கொள்­மு­த­லுக்கு, ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்­க­ளிக்க வேண்­டும்.

மூலக்கதை