மகிந்திராவின் டிரைவர் இல்லா புதிய டிராக்டர்கள்

தினமலர்  தினமலர்
மகிந்திராவின் டிரைவர் இல்லா புதிய டிராக்டர்கள்

சென்னை : மகிந்­திரா குழு­மத்­தைச் சேர்ந்த, மகிந்­திரா டிராக்­டர் நிறு­வ­னம், நாட்­டி­லேயே முதன்­மு­றை­யாக, டிரை­வர்­கள் தேவைப்­ப­டாத, டிராக்­டரை அறி­மு­கம் செய்­து உள்­ளது.இந்த டிராக்­டர்­களை, டேப்­லட் போன்ற சாத­னங்­கள் உத­வி­யு­டன், தொலை­வி­லி­ருந்து இயக்க முடி­யும். இந்த டிராக்­டர், 2018 துவக்­கத்­தில், விற்­ப­னைக்கு வர இருக்­கிறது.

முத­லா­வ­தாக, டிரை­வர்­களை அதி­கம் சார்ந்­தி­ருக்க வேண்­டிய தேவையை குறைப்­ப­தற்­கும், இரண்­டா­வ­தாக, முழுக்­கவே டிரை­வர்­கள் இல்­லா­மல் இயங்­கும் டிராக்­டர்­களை தயார் செய்­வ­தற்­கும், முன்­னு­ரிமை வழங்கி வரு­வ­தாக, மகிந்­திரா டிராக்­டர்ஸ் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. இந்த வகை டிராக்­டரை தயா­ரிக்­கும் பணி­கள், சென்­னை­யில் உள்ள நிறு­வ­னத்­தின் ஆராய்ச்சி மையத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர் பவன் கோயங்கா கூறு­கை­யில், ‘‘இவ்­வகை டிராக்­டர்­க­ளால் விளைச்­சல் அதி­க­ரிக்­கும்; செல­வும் குறை­யும்,’’ என்­றார்.

டிரை­வர் இல்லா டிராக்­டர் மட்­டு­மின்றி, மின்­சா­ரத்­தில் இயங்­கும், எலக்ட்­ரிக் டிராக்­டர் தயா­ரிப்­பி­லும், இந்­நி­று­வ­னம் ஈடு­பட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை