மெக்சிகோவில் நிலநடுக்கம்: பலி 248

தினமலர்  தினமலர்
மெக்சிகோவில் நிலநடுக்கம்: பலி 248

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 248 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா அருகில் உள்ள மெக்சிகோவில், மெக்சிகோ சிட்டி நகரில், நேற்று முன்தினம் இரவு, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், 7.1 ஆக பதிவானது; ஏராளமான கட்டடங்கள் நொறுங்கி விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி, 248 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மெக்சிகோ அதிபர், என்ரிக் பீனா நீடோ, நேரில் சென்று, மீட்புப் பணிகளை பார்வையிட்டார். மெக்சிகோவில், 1985ல், ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 10 ஆயிரம் பேர் இறந்தனர்.

பள்ளி இடிந்து 21 குழந்தைகள் பலி : மெக்சிகோ சிட்டியில், தொடக்கப் பள்ளி ஒன்றின், மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், அந்த பள்ளியில் படித்து வந்த, 21 குழந்தைகள் உட்பட, 26 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அந்த பள்ளியில், மேலும், 40 பேர் சிக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன; அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

மூலக்கதை