'இன்டர்நெட் அழைப்பு ஆப்' : தடையை நீக்கியது சவுதி

தினமலர்  தினமலர்
இன்டர்நெட் அழைப்பு ஆப் : தடையை நீக்கியது சவுதி

ரியாத்: 'இன்டர்நெட் அழைப்பு ஆப்'களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, வளைகுடா நாடான சவுதி அரேபியா நீக்கியுள்ளது. வளைகுடா நாடான கத்தாருடனான துாதரக உறவை, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் சமீபத்தில் துண்டித்தன. இதைத் தொடர்ந்து, 'வாட்ஸ் ஆப், ஸ்கைப்' போன்ற இன்டர்நெட் அழைப்பு ஆப்களுக்கு, சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கத்தாரை தலைமையிடமாக வைத்து செயல்படும், அல் - ஜசீரா, 'டிவி' ஒளிபரப்புக்கும், சவுதி அரேபியா தடை விதித்திருந்தது; இதற்கு, அந்த நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 'மக்கள்தொகையில், 50 சதவீதம் பேர், 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ள சவுதி அரேபியாவில், இந்த நவீன வசதிகளை நிறுத்துவதால், தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும்' என, சவுதி அரேபிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், அரசுக்கு ஆலோசனை கூறியது. அதனடிப்படையில், இன்டர்நெட் அழைப்பு ஆப்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது.

மூலக்கதை