சரத்யாதவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் : துணை ஜனாதிபதியிடம் நிதிஷ் கட்சி கோரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சரத்யாதவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் : துணை ஜனாதிபதியிடம் நிதிஷ் கட்சி கோரிக்கை

புதுடெல்லி : ஐக்கிய ஜனதாதளத்தை விட்டு வெளியேறிய சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகிய இருவரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறிக்கவேண்டும் என மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடுவிடம் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் 18 அதிமுக உறுப்பினர்களின் பதவியை பறித்த முடிவை சுட்டிக்காட்டி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இது குறித்து ஐக்கிய ஜனதாதளத்தின் செய்தித்தொடர்பாளர் கே. சி.

தியாகி கூறுகையில், அதிமுகவின் உறுப்பினர்கள் போல் சரத் யாதவும், அலி அன்வரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். இதனால் இருவரின் பதவியை பறிக்கும்படி மாநிலங்களவையின் தலைவரும், துணைக்
குடியரசுத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.   கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பதில் கூறும்படி கூடுதலாக ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது.



கட்சியின் உறுப்பினர் பதவியை தானாகவே விட்டுக்கொடுத்த மக்கள் பிரதிநிதிகளின் பதவியை பறிப்பதற்கு மாநிலங்களவை தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. அதிமுக பேரவை உறுப்பினர்களும், சரத் யாதவ் மற்றும் அன்வர் அலி ஆகிய இரு உறுப்பினர்களும் ஒரே நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய தியாகி சரத் யாதவ்வை லாலு கட்சி கூட்டிய பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஐக்கிய ஜனதாதளம் எச்சரித்ததையும் அப்படி செய்வது கட்சி உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுப்பதாகவே கருதப்படும் என்று கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

2016 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் பேரவையில் ஒன்பது போட்டி உறுப்பினர்களை பேரவைத் தலைவர் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி பதவி நீக்கம் செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.


.

மூலக்கதை