நாடாளுமன்றம் தொடர் முற்றுகை : விவசாயிகள் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடாளுமன்றம் தொடர் முற்றுகை : விவசாயிகள் முடிவு

தஞ்சை : தென் மாநிலங்களில் விவசாயிகள் விடுதலைப்பயணம் மேற்கொண்டுவரும், அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு நேற்று இரவு தஞ்சை வந்தது. குழுவில் மகாராஷ்டிரா ராஜூஷெட்டி, பெங்களூரு கவிதா குர்ஹானி, மத்திய பிரதேசம் சுனில் லாம், தமிழக ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூ) மாநிலப் பொதுச் செயலர் துரைமாணிக்கம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள்  விவசாயிகளை சந்தித்து பேசினர். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் வி. எம்.

சிங் பேசுகையில், ‘டெல்லியில் போராட்டம் நடத்தியபோது அய்யாக்கண்ணுவுடன் அடிக்கடி சந்தித்தோம். இதைத்தொடர்ந்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு உருவானது.

விவசாயிகள் மீண்டும் கடன் வாங்கக் கூடாத சூழ்நிலையை உருவாக்குவோம் என பிரதமர் கூறினார்.

அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளை கடனிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கக் கோரியும், விவசாய உற்பத்தி பொருளுக்கு, செலவுடன் 50 சதவீதம் கூடுதல் விலையை தேசிய விவசாயிகள் குழு பரிந்துரை செய்ததை சட்ட ரீதியான உரிமையாக அறிவிக்க வலியுறுத்தியும் டெல்லி ராம் லீலா மைதானத்தில் வரும் நவம்பர் 20ம் தேதி மாபெரும் விவசாயிகள் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அப்போதுதான் நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கும்.

பொதுக்கூட்டத்துக்குப் பிறகு தினமும் விவசாயிகள் நாடாளுமன்றம் முற்றுகை நடத்தப்படவுள்ளது’ என்றார்.

.

மூலக்கதை