தண்ணீருக்கு சிக்கல்: நீர்நிலைகளில் தொடருது மணல் திருட்டு: தனியார் நிலங்களையும் விட்டு வைக்கல

தினமலர்  தினமலர்

சாத்துார்;விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் தனியாருக்குசொந்தமான பட்டா நிலங்களில் மணல் கொள்ளை நடப்பது தொடர் கதையாகஉள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் பருவமழைக்காலத்தில்மட்டுமே வெள்ளப்பெருக்கு ஏற்படும்.மற்ற காலங்களில் வறண்டுகாணப்படும். பல ஆண்டுகளாக ஓடிய வெள்ளம் காரணமாகவைப்பாறு, அர்ச்சுனாநதி, உப்போடைநதி, கவுசிகா போன்ற நதிகளில்இயற்கையாக மணல் பறந்து விரிந்து காணப்பட்டது. ஆனால் கால மாற்றம்காரணமாக வீடுகள் வணிகவளாகங்கள் தொழிற்சாலை கட்டுமானபணிகளுக்கு அதிகளவு மணல் பயன்படுத்தப்பட்டதால் ஆறுகளில்இருந்த மண் வளம் கொள்ளை போனது.
அதலபாதாளத்தில் நீர்மணற்பாங்காக இருந்த வைப்பாறுதற்போது மணல் திருட்டால் கட்டாந்தரையாக, பாறையாக மாறிவிட்டது.தொடர்ந்து பல ஆண்டுகள் மழை பெய்யாமல் போனதாலும்மண் வளம் குறைந்து விட்டது. சாத்துார் பகுதியில் சங்கரநத்தம், படந்தால்,ஒ.மேட்டுப்பட்டி,நென்மேனி, முடித்தலை, எம்.நாகலாபுரம், இருக்கன்குடி,மற்றும் சிந்தப்பள்ளி,சாத்துார் பகுதிகளிலும் ஆறு மற்றும் ஆற்றங்கரையோரங்களில் உள்ள பட்டா நிலங்களில் மண் அள்ளும் இயந்திரத்துடன்மணல் லாரிகள் மற்றும் டிராக்டரில் மணல் கடத்தி செல்வதுதொடர்கதையாக உள்ளது.
விவசாய நிலங்களில்,பட்டா நிலங்களில் சவுடு மணலுக்கு அடியில் புதைந்து கிடக்கும்மணலையும் மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் திருடிச்செல்கின்றனர்.போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனைகள்செய்து மணல் திருட்டை தடுத்தாலும் இது போன்ற செயல்கள்தொடர்கிறது.இதனால் நிலத்தடிநீர் மட்டம் அதலபாதளத்திற்கு சென்று விட்டது.உள்ளூர் அதிகாரிகள் பலகிராமங்களில் ஆழ்துளை கிணறுகளை பல நுாறு அடிகள்ஆழத்தில் அமைத்தும் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.
மணல்குவாரிகளுக்கு சென்று மணலை வாங்காமல் இப்படி ஆங்காங்கே கிடைக்கும் இடத்தில் எல்லாம்அனுமதியின்றி மணல் எடுப்பதை தடுக்க கிராமமக்களும் அரசு அதிகாரிகளும்முன்வர ேவண்டும் பல கிராமங்களில் ஊருக்கு என குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து கொண்டு மணல் எடுக்ககிராமத்தினரே அனுமதி அளிப்பதும் தான் மணல் திருட்டை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சில பகுதிகளில் உள்ளூர் அதிகாரிகள் 'மாமூலால்'கண்டும் காணாமல் இருந்துவிடுவதாலும் மணல் திருட்டு தொடர்கிறது.வருங்கால சந்ததியினர் வாழநிலத்தடிநீர் வளம் அவசியம் என்பதை உணர்ந்து அனைவரும் தங்கள் கடமையை செய்ய வேண்டும்என்பது சமூகஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
சவுடு மணலையும் விடலகட்டுமான பணிகளுக்கு தரமான மணல் பயன்படுத்த வேண்டும் தற்போது தனியார் பட்டாநிலங்களிலும், ஆறுகளில் சவுடு மணலை தோண்டி அதன் அடியில் இருக்கும் மணலை எடுத்துவிற்பனை செய்கின்றனர்.இதையும்அரசு அனுமதியின்றி செய்கின்றனர். குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கும் போதே நிலத்தடி நீர் மட்டம்குறையும் அபாயம் உள்ளது. அரசு அதிகாரிகள் கண்காணித்து தீவிரநடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும்.--கணேசன், சாத்துார்

மூலக்கதை