தமிழக ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.5,000 கோடியை தாண்டியது

தினமலர்  தினமலர்
தமிழக ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.5,000 கோடியை தாண்டியது

ஜி.எஸ்.டி., அமலான பின், தமிழகத்திற்கு வரி வருவாய் குறையவில்லை. ஜூலை மாத வருவாய், 5,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

தமி­ழ­கத்­தில், 2016 – 17ம் நிதி­யாண்­டில், வணிக வரித்­துறை, 67 ஆயி­ரத்து, 576 கோடி ரூபாய் வரு­வாய் ஈட்­டி­யது. தற்­போது, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்­றும் சேவை­ வரி அம­லுக்கு வந்­துள்­ளது. அத­னால், தமி­ழ­கத்­திற்கு பாதிப்பு ஏற்­படும் என, கரு­தப்­பட்­டது.
எதிர்பார்ப்பு:
இதற்­கி­டையே, மத்­திய அமைச்­சர் அருண் ஜெட்லி, ‘ஜூலை இறு­தி­யில், ஜி.எஸ்.டி., வாயி­லாக, மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு, 92 ஆயி­ரத்து, 263 கோடி ரூபாய் வரு­வாய் கிடைத்­தது.‘அது, நிர்­ண­யிக்­கப்­பட்­டதை விட அதி­கம்’ என, தெரி­வித்­தார். ஆனால், தமி­ழ­கம், உற்­பத்தி மாநி­லம் என்­ப­தால், அதற்கு பாதிப்பு ஏற்­படும் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது. எனி­னும், வரு­வாய் குறை­ய­வில்லை என, தமி­ழக அதி­கா­ரி­கள் உறு­திப்­ப­டுத்­தி­உள்­ள­னர்.

இது குறித்து, வணிக வரித்­துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: தமி­ழ­கத்­தில், தற்­போது, 75 சத­வீத வணி­கர்­கள், ஜி.எஸ்.டி., செலுத்­தி­யுள்­ள­னர். அத­னால், வரி வரு­வாய், 5,000 கோடி ரூபாயை தாண்­டி­யுள்­ளது. இது, ஜி.எஸ்.டி.,க்கு முன்­பி­ருந்த வழக்­க­மான, மாத சரா­சரி வரு­வாய் ஆகும். இதில், 45 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிப்பு வரம்பில் வராத, பெட்­ரோ­லிய பொருட்­கள் மற்­றும் மது­பான வகை­கள்.
குறையவில்லை:
அதை நீக்­கி­விட்டு பார்த்­தா­லும், நமக்கு வரு­வாய் குறை­ய­வில்லை. இது­த­விர, ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும், மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான சரக்கு பரி­வர்த்­தனை இன்­னும் வர வேண்­டி­யுள்­ளது. அதில், இது­வரை, 400 கோடி ரூபாய் வந்­துள்­ளது. எனி­னும், நம் ஆண்டு வரு­வா­யில், 14.5 சத­வீ­தம் அதி­க­ரிக்க வேண்­டும். இல்­லா­விட்­டால், அதற்கு ஈடாக, மத்­திய அரசு, நமக்கு இழப்­பீடு வழங்க வேண்­டும். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

– நமது நிருபர் –

மூலக்கதை